இந்தியாவில் வசித்து வரும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியர்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை பற்றி தனது அனுபவங்களை வீடியோவாக பகிர்ந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வசித்து வரும் ப்ரீ ஸ்டில் என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்தியர்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையாக இல்லை என்று கூறியுள்ளார்.

இந்தியர்கள் சமைப்பதற்கு, துணி துவைப்பதற்கு மற்றும் வீட்டை சுத்தம் செய்வதற்கு உதவியாளர்களை நாடி இருக்கிறார்கள் என்றும், இந்திய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் இரவு 9:30 மணிக்கும் வேலை தொடர்பான அழைப்புகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு மேற்கத்திய நாடுகளில் முழு நேர வேலைகளில் தாங்கள் ஈடுபட்டாலும் வீட்டு வேலைகளை நாங்களே செய்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Bree Steele | Podcast producer & host பதிவைப் பகிர்ந்துள்ளார் (@breesteele.mp3)

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர் “இந்திய உணவு சமைப்பது மேற்கத்திய உணவுகளை போல எளிதானது அல்ல, அதிக நேரமும் உழைப்பும் தேவை” என்று கருத்து தெரிவித்துள்ளார். இன்னொருவர் உழைப்பாளர்கள் இருந்தும், இந்தியர்களின் தனிப்பட்ட நேரம் மிகவும் குறைவு என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா பெண் தனது அனுபவங்களை நேர்மையாக பகிர்ந்து கொண்டது இந்திய சமூகத்தில் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலை பற்றிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவாதம் இந்தியர்களின் கடுமையான உழைப்பையும் சமூக அமைப்பையும் பிரதிபலிப்பதாக காணப்படுகிறது.