
தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது தேசிய கட்சியான தங்களுக்கு யானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகம் தங்கள் கொடியில் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்று பகுகஜன் சமாஜ் கட்சி குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளது.
இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டபோது அவர்கள் இன்னும் முறையாக தங்களிடம் பதிவு செய்யவில்லை எனவும் பதிவு செய்த பிறகு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்துவதற்கு தடை கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.