
தமிழக முதல்வர் ஸ்டாலின் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட மாடல் ஆட்சியின் 2.0 வெர்ஷன் நடக்கும் என்றார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அடுத்து வரும் தேர்தலில் அதிமுக வெர்ஷன் தான் நடக்கும் என்று பதிலடி கொடுத்தார். இதனை தற்போது அதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, கரப்ஷன் ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு வெர்ஷன் பற்றி பேச தகுதி இருக்கிறதா.? தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த நினைக்கும் பாஜகவிற்கு அதன் அடிமை அதிமுகவிற்கும் கண்டிப்பாக அடுத்து வரும் தேர்தலில் மக்கள் கெட் அவுட் சொல்வார்கள்.
தற்போது 66 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவிற்கு 6 எம்எல்ஏக்கள் கூட கிடைக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு தலைநிமிர்ந்து நின்றது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அப்படி சிறப்பான ஆட்சி நடத்தி இருந்தால் எதற்காக தொடர்ந்து 10 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. மேலும் இடி அமின் ஆட்சியை நடத்திவிட்டு இம்சை அரசன் போல் இபிஎஸ் உளறிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.