கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இது சூர்யாவின் 44வது திரைப்படம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ரெட்ரோ திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கண்ணாடிப் பூவே, கனிமா ஆகிய பாடல்களுக்கு ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 27-ஆம் தேதி திரைப்படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது.

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் பல இடங்களில் ஹவுஸ் ஃபுல்லாக மாறியது. முதல் நாளுக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக முடிந்தது. இன்றும் நாளையும் டிக்கெட் புக்கிங் 80 சதவீதம் விற்பனை ஆகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக சூர்யா நடிப்பில் ரிலீசான கங்குவா திரைப்படம் தோல்வியை சந்தித்தது. ஆனால் ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.