
தொகுப்பாளனியாக தனது பயணத்தை ஆரம்பித்த மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து வேலை பார்த்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மணிமேகலைக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
ஆனால் கடந்த குக் வித் கோமாளி சீசனில் மணிமேகலைக்கும், பிரியங்காவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதற்கான காரணம் குறித்து மணிமேகலை வெளியிட்ட வீடியோ பூதாகரமாக வெடித்து சர்ச்சையை கிளப்பியது.
தற்போது மணிமேகலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் மணிமேகலை ஒரு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு பிடித்த தொகுப்பாளினி வேலையையே என் வாயாலயே வேண்டாம்னு சொல்ல வச்சாங்க.
அதே மாதிரி உங்க கரியர முடிச்சுடுங்கன்னு சொன்னாங்க. ஆனா அந்த பிரச்சனைக்கு அடுத்த நாளே எனக்கு ஜீ தமிழ்ல வாய்ப்பு கிடைத்தது என கூறியுள்ளார்.