
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
தற்போது ஜம்மு காஷ்மீரில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியின் தலைமையில் அவரது இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி அணில் சௌஹான் ஆகியோர் பங்கேற்றனர்.