
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் தமிழ்நாட்டு மக்கள் 2026லும் கெட் அவுட் சொல்லப்போவது உறுதி. இப்போது இருக்கிற 66 அதிமுக எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கையில் 2026ல் 6 கூட கிடையாது என்று கூறினார்.
மேலும் பாஜக கூட்டணியில் சேர்ந்த போது அதிமுகவின் வெர்ஷன் முடிந்துவிட்டது. கூட்டணி ஆட்சி என்று சொன்னபோதே பழனிச்சாமியின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.