
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்தெந்த கட்சிகள் கூட்டணி சேரும் என்பதை தேர்தல் நேரத்தில் தான் பார்க்க முடியும். இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது.
கட்சி ஆரம்பித்த பிறகு மாநாடு, மாவட்ட செயலாளர்கள் நியமனம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் தான் பூத் கமிட்டியும் நடைபெற்றது. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னை கொளத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது 200 தொகுதிகளை விட அதிகமாக வெல்வோம். திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி ரொம்ப நாள் ஆகிறது என கூறியுள்ளார்.