
தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, 75 ஆண்டுகால இந்திய அரசியலில் யாரும் செய்யாததை நான் செய்யப் போகிறேன். இந்த ஆட்சிக்கு பில்லு மட்டும் இல்லை, நான் போலீஸ் வேலையில் எப்போ சேர்ந்தனோ… 2010, இன்றைக்கு 2022. 13 ஆண்டுகள் நான் சம்பாதித்த எல்லாத்தையும் பொதுமக்களுக்கு ஓபன் பண்ணி காட்டுறேன். எல்லா பேங்க் அக்கவுண்ட் டீடைல்ஸ்.எனக்கு சம்பளம் மட்டும் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது, கிட்டத்தட்ட ஏறக்குறைய இன்னும் சரியா கணக்கு பார்க்கல.
80 லட்சத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை சம்பளம் வந்து இருக்கலாம். மாதம் 85 ஆயிரம் கொடுக்குறாங்க. கடைசியா எஸ்.பி ஆனா போது ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் கொடுத்தாங்க. ஒரு கோடி ரூபாய் சம்பளம் வந்திருக்கும். அந்த ஒரு கோடி ரூபாயையும் எப்படி செலவு செய்தேன் என காட்டப் போகிறேன். பேங்க் அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் வந்துட்டாலே, வரவு – செலவு பாத்தரலாம். கிரெடிட் கார்டு பில் 25 லட்ச ரூபாய்க்கு கட்டியிருப்பேன்.
அந்த 13 வருஷத்துல எல்லா பில்லு… செல்போன் பில்லில் இருந்து, எல்லா பில்லுமே ஜெராக்ஸ் போட்டு கொடுத்துடறேன். இதோட மொத்த பக்கம் 600 – 700 பக்கம் வருவதால், நான் பாதயாத்திரைக்கு முன்பு நடக்கக்கூடிய பிரஸ் மீட்டில் ஒரு வெப்சைட் இதுக்குன்னே போட்டு, எல்லாத்தையும் அப்லோட் பண்ணி, தனித்தனி வருஷம், வருஷமா, மாதமாதமா போட்டு… செலவுகளையும் குறித்து… பாதி எடிட்டிங் டீம் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.. எல்லாத்தையும் கொடுத்துடறேன் என தெரிவித்தார்.