
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் நடிகர் அஜித்தால் தான் பல கோடி நஷ்டம் அடைந்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, அஜித் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான ஜனா படம் ரிலீஸ் ஆக 3 வருடங்கள் ஆனதால் பல கோடி நஷ்டம் அடைந்தேன். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். அப்படத்தின் போது எனக்கும் அஜித்துக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் சில நபர்களின் பேச்சை கேட்டு படப்பிடிப்புக்கு வராமல் அஜித் காலதாமதம் செய்தார். அதன் பிறகு நான் அஜித்தை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் ரோஜா கம்பைன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் அஜித், முரளி, சரத்குமார் போன்ற பல நடிகர்களின் வெற்றி படங்களை தயாரித்தவர் காஜா மொய்தீன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.