
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் போக்குவரத்து துறை சார்பாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தில் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து மட்டும் 10,749 பேருந்துகளும், தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னையில் 5 பேருந்து நிலையங்களில்இருந்து 10,749 பேருந்துகள் 3 நாட்களில் இயக்கப்படுகிறது. கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி உள்பட 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.