தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற மொழிகளில் பல முன்னணி ஹீரோகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்‌. இவர் மலையாளத் திரையுலகிலும் ஒரு புதிய படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை மதுர் பண்டர்க்கார் இயக்க, சாகில் வைத், அபிஷேக் பஜாஜ், ஆராதனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகை தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி தமன்னாவின் இன்றைய சொத்து மதிப்பு ரூ.110 கோடி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வரும் சமந்தா, நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் திரைப்படத்தில் மட்டும் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.