பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கேங்க்ஸ் ஆஃப் வசேப்பூர் உள்ளிட்ட முக்கிய படங்களில் நடித்திருக்கும் மனோஜ், தமிழில் Family man 2 வெப் சீரிஸ் மூலம் பிரபலம் அடைந்தார். அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், “என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்தால் பதில் கொடுக்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். இன்று 20 கோடி ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.