இந்தியாவில் உள்ள நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோ டெக் நிறுவனம் தயாரித்த Doc-1 Max-1 syrup என்ற இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டது. அதன் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட இருமல் மருந்தை ஆய்வகத்தில் சோதித்ததில் எத்திலின் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் மருந்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நொய்டாவை சேர்ந்த மாரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் AMERONEL Syrub, DoK-1 Max Syrub ஆகிய இரண்டு மருந்துகளையும் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மருந்துகள் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி உயிரை பறித்து விடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.