சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதில் பயணம் செய்யும் பயணிகளை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும்  பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது.மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கிறது. அதன்படி 9-வது மாதாந்திர குலுக்களில் 30 பயணிகளை தேர்வு செய்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

இந்நிலையில் மெட்ரோ ரெயிலில் அதிகமுறை பயணம், ஒரு பரிவர்த்தனைக்கு அதிக பணம் செலுத்தியது, பயண அட்டையில் குறைந்த பட்ச தொகையான ரூ.500-க்கு டாப்-அப் செய்தது என 3 பிரிவுகளில் தலா 10 பேர் வீதம் 30 பயணிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 30 பயணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.