அமெரிக்காவில் உள்ள லூசியானாவில் நியூ ஆர்லியன்ஸ் நகர் அமைந்துள்ளது. இங்கு பிரபஞ்ச அழகு 2023 (மிஸ் யுனிவர்ஸ் போட்டி) போட்டி நடைபெற்ற நிலையில் 86 பெண்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் பிரபஞ்ச அழகி போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த ஆர்போனி கேப்ரியல் பட்டத்தை வென்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதனையடுத்து வெனிசுலாவை சேர்ந்த டயானா சில்வா 2-வது இடத்தையும், டொமினிகன் குடியரசை சேர்ந்த அமி பெனா 3-வது இடத்தையும் பிடித்துள்ளார். மேலும் இந்தியா சார்பாக சோன் சிரியா உடை அணிந்து போட்டியிட்ட திவிதா 16-வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.