
அரிய வகை தனிமங்கள் சந்தையில் அமெரிக்கா போன்ற நாடுகளை பின்னுக்கு தள்ளி சீனா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. உலகம் முழுவதும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அவற்றை பயன்படுத்த உதவும் மின்னணு சாதனங்களும் பெருகிவிட்டன. இவற்றில் தொலைக்காட்சியின் திரை, ஸ்மார்ட்போன், மைக்ரோ போன், கணிப்பொறியின் வன்பொருட்கள், மின்சார கார்கள், ஒலிபெருக்கிகள், சூரிய தகடுகள் என்று பல்வேறு பொருட்கள் உபயோகத்தில் உள்ளன.
இவற்றின் உற்பத்தியில் அடிப்படை தேவையான காந்தங்களின் பயன்பாடுகளும் உள்ளன. இந்த காந்தங்கள் மற்றும் அரிய வகை தனிமங்களுக்கு என்று அதிக தேவை காணப்படுகின்றது. இந்த அரிய வகை தனிமங்கள் மொத்தம் 17 தாதுக்கள் உள்ளன. இவற்றில் காணப்படும் காந்தப்புலன் மற்றும் மின்சாரம் கடத்தும் பண்புகளால் அவை காந்தங்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன. இதன்படி 2021 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் அரிய வகை தனிமங்களின் சந்தையில் 61% சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இருந்தன. இதன்படி 1.68 லட்சம் டன்கள் உற்பத்தியாகி இருந்தன. இது அமெரிக்கா போன்ற நாடுகளை கலக்கமடைய செய்துள்ளது.