புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முழுமையாக அறிந்துக்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அங்கு சென்றார். இதையடுத்து அப்பகுதியை பார்வையிட்ட சீமான், மக்களை சந்தித்து நடைபெற்ற விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “வேங்கைவயல் கிராம மக்களை பொறுத்தவரையிலும் பொது குடிநீர் தொட்டி கட்டிதர வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. நான் முதல்வராக இருந்திருந்தால் வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்து சிறைச்சாலையில் அடைத்திருப்பேன். இது பெரியார் மண், சமூகநீதிக்கான மாநிலம் என்று கட்டமைத்திருப்பது எல்லாம் இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலை” என்று அவர் கூறினார்.