சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் “சாருகேசி” என்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு விழாவானது நடைபெற்றது. இந்த படத்தை நடிகர் ஒய். ஜி மகேந்திரன் புதிதாக தொடங்கியுள்ள SARP PRODUCTIONS மூலம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் நடிகர் ரஜினி கலந்து கொண்டு திரைப்படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அப்போது அவர் பேசியுள்ளதாவது, கடந்த 45 வருடத்திற்கு முன் “ரகசியம் பரம ரகசியம்” என்ற நாடகத்தை பார்க்க வந்தபோது, மயிலாப்பூரில் உள்ள அரங்கின் உள்ளே என்னை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது சாருகேசி நாடகத்தின் 50-வது விழாவில் தலைமை விருந்தினராக வந்திருப்பது அந்த காலத்தின் செயல் என்று கூறியுள்ளார். மேலும் YGP நாடக குழுவில் இருந்து வந்த ஜெயலலிதா, நாகேஷ், சோ, விசு ஆகியோர் பாதுகாப்பும்,  கண்ணிமைமிக்க நாடக குழுவினராக திகழ்ந்தனர். இதனையடுத்து ஒய்.ஜி. மகேந்திரனுக்கு “என் மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் மிகப்பெரிய கடன்பட்டுள்ளேன் என்றும் கூறினார். நான் நடத்துனராக வேலை செய்தபோது தினமும் மது,சிகரெட் பழக்கம் மற்றும் அசைவ பழக்கம் போன்றவை  ஒரு காலத்தில் என்னோடு ஒட்டி இருந்த நிலையில், அதை மாற்றி ஒழுக்கம் உள்ளவனாக மாற்றி வாழ வைத்தவர் என் மனைவி லதா தான் என்று ரஜினி பேசியுள்ளார்.