
கன்னட திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து வந்தவர் விஷ்ணுவர்தன். இவர் கடந்த 2009 ஆம் வருடம் தன் 59வது வயதில் மரணமடைந்தார். இதையடுத்து மத்திய அரசு இவருக்கு 2013 வருடம் ஆண்டு தபால்தலை வெளியிட்டு கவுரவித்தது. அதோடு மாநில அரசு விஷ்ணுவர்தனுக்கு நினைவிடம் கட்டப்படும் என அறிவித்தது.
அந்த வகையில் மைசூரு அருகில் உள்ள அவரது சொந்த ஊரான ஹலாலு கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 11 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. அவருடைய நினைவு தினமான நேற்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இதை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் விஷ்ணுவர்தனின் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான பாரதி, மகள் கீர்த்தி, மருமகன் அனிருத், மைசூர் எம்பி பிரதாப் சிங் உட்பட பலர் பங்கேற்றனர்.