
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தற்போது தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்க இயக்குனர் கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், பிக் பாஸ் புகழ் ஜனனி ஆகியோரும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்கள்.
அதன் பிறகு பகத் பாஸில் , நடிகர் கமல்ஹாசன், நடிகர் விக்ரம் போன்றோரும் படத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அதன் பிறகு அனிருத் படத்திற்கு இசையமைக்க, நடன இயக்குனராக தினேஷ் மாஸ்டர் பணிபுரிகிறார் . இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தற்போது உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் 3 மாதங்களுக்கு பிறகு டுவிட்டர் பக்கம் வந்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜயுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தளபதி 67 திரைப்படத்தை இயக்குவது உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் கையில் ரத்த கரையுடன் காப்பை பிடித்தவாறு லோகேஷ் மற்றும் விஜய் நிற்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again ❤️ 🔥#Thalapathy67 🤜🏻🤛🏻 pic.twitter.com/4op68OjcPi
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023