நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் அஞ்சலகத்தில் சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கி டெபாசிட் உச்சவரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சம் ஆக உயர்த்தி பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அஞ்சலகத்தில் தனிநபர் வங்கி கணக்குக்கான சேமிப்பு தொகை உச்சவரம்பு ரூ.9 லட்சம் ஆகவும், ஜாயிண்ட் கணக்குகளுக்கான சேமிப்பு தொகை உட்சவரம்பு ரூ.15 லட்சம் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.