நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்நிலையில் மத்திய பட்ஜெட் மீது காங்கிரஸ் தலைவர் கார்கே அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல்களை கருத்தில் கொண்டு பட்ஜெட்டை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. ஏழைகளுக்கு இதில் எந்த சலுகையும் இல்லை. பண வீக்கத்தை தடுக்கவும் நடவடிக்கை இல்லை. ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அரசுத்துறைகளில் காலியான இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கவில்லை என காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார்.