தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தகவல் தொழில்நுட்ப துறை மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர் விவசாயம், காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் உள்ள பிரச்சனைகளை தீர்க்க தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்த முறை தேவை என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் 2030 வருடத்திற்குள் 25 லட்சம் இளைஞர்கள் தகவல் தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அதற்காக தொழில்நுட்ப பயிற்சி நிலையங்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த முடியாது என்பதன் காரணமாக தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்க ஊரகப்பகுதியில் அனைத்து வகையான கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.