
சிரியா, துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் துருக்கியில் 3500-க்கு மேற்பட்டோரும் சிரியாவில் 1500-க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி இருப்பதாக அஞ்சப்படுகிறது. துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 7.8 என்ற ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இரு நாடுகளிலும் 4800-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது துருக்கியில் 5வது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. புதிய நிலநடுக்கம் ரிக்டரில் 5.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பல்வேறு நாடுகளிலிருந்து மீட்பு குழுக்கள் சிரியா, துருக்கி சென்றுள்ளது. இந்தியாவிலிருந்தும் மீட்பு படையினர் சிரியா மற்றும் துருக்கிக்கு சென்று மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களோடு மருந்துகளையும் எடுத்துச் சென்றுள்ளது இந்திய படை. இந்நிலையில் இரண்டாவது நாளாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் 2ஆவது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது..