
துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா எல்லையில் உணரப்பட்டுள்ளதும் இதனால் இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டிடங்கள் இடித்து மலை போல குவிந்து கிடக்கிறது. இன்னும் பல கட்டிடங்கள் இடிந்து விடும் அபாயத்தில் இருக்கிறது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக தூங்கிக்கொண்டிருந்த மக்கள் தப்பிக்க வழி இல்லாமல் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 5,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கம் வருவதற்கு முன்னதாகவே பறவைகள் மக்களை எச்சரிக்கும் விதமாக கூச்சல் போட்டு வானில் வட்டம் இட்டுள்ள காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது மூன்று தினங்களுக்கு முன்பே டச்சு ஆராய்ச்சியாளர் பிராங்க் கூக்கல் பிட் என்பவர் கணித்து செய்துள்ளார்.
🚨In Turkey, strange behavior was observed in birds just before the earthquake.👀#Turkey #TurkeyEarthquake #Turkish pic.twitter.com/yPnQRaSCRq
— OsintTV 📺 (@OsintTV) February 6, 2023