நடிகை பரதா நாயுடு தமிழில் தேன் மிட்டாய் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அவருக்கு சின்னத்திரைத்தான் மக்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது. இவர் தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி நாடகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் மித்ராவாக நடித்திருந்தார். தற்போது தாலாட்டு சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றார்.

இவருக்கும் பரத் என்பவருக்கும் சென்ற 2020 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 3 வருடம் ஆன நிலையில் கொண்டாடும் விதமாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கின்றார். மேலும் இத்தம்பதிக்கு இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.