காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் சனிக்கிழமை தோறும்  ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து தினமும் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு காலை 11:45 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடைகிறது. மறு மார்க்கமாக  ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் பகல் 12:40 மணிக்கு புறப்படும் இந்த ரயில் பகல் 2.40 மணிக்கு காட்பாடியை சென்றடைகிறது.

வருகிற பிப்ரவரி 11,18 மார்ச் 4,11 ஆகிய தேதிகளில் இந்த ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் வேலூர் கண்டோன்மண்டில் இருந்து தினமும் காலை 10 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் காலை 11:55 மணிக்கு அரக்கோணம் சென்றடைகிறது. மறு மார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து தினமும் பகல் 2.05 மணிக்கு புறப்படும் மெமு  விரைவு ரயில் மாலை 4.35 மணிக்கு வேலூர் கண்டோன்மண்ட் சென்றடைகிறது. இந்த ரயிலானது வருகிற பிப்ரவரி 14,21 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.