
மனிதனை கட்டி தழுவிய நீர்நாய் தொடர்பான வீடியோ இணையத்தை கவர்ந்து வருகிறது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான பிணைப்பை காட்டும் வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக உலா வருகிறது. அவற்றை பார்ப்போரின் கவலைகள் எளிதில் நீங்கிவிடும்.
நீர் நாய்கள் பொதுவாக கூச்ச சுபாவம் கொண்டவையாக கூறப்படுகிறது. மனிதர்களை கண்டால் ஒழிந்து கொள்ளும் என சொல்லப்படுகிறது. ஆனால் இங்கே மனிதனை கண்டதும் ஓடி வந்து தழுவிக் கொண்டது. நீர் நாயின் இந்த செயல் மனிதர்களின் பாசத்திற்காக அரவணைப்புக்காக விலங்குகளும் ஏங்குகின்றன என்பதையே உணர்த்துகின்றது.