
ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994-இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது சிறந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் இவர் கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
பொதுவாக பல நடிகர்களுக்கு மிக பெரிய கனவாக இருப்பது ஹாலிவுட் படங்களில் நடிப்பது தான். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராய் Troy என்ற படத்தில் Brad Pitt உடன் நடிக்க முன்பு வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என கூறி மறுத்துவிட்டார்.
அதில் கவர்ச்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியாது என்ற காரணத்தால் ஐஸ்வர்யா நடிக்க மறுத்துவிட்டார். மேலும் அந்த படத்திற்காக 6 முதல் 9 மாதங்கள் வரை லாக் இன் period கேட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தனக்கான ரோல் மிக சிறியதாக தோன்றியதால் ஐஸ்வர்யா மறுத்துள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
