
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் பங்குகள் முறை கேட்டில் ஈடுபட்டதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து தற்போது ஃபோர்பஸ் நிறுவனமும் அதன் குழுமம் பங்கு முறையிட்டில் ஈடுபட்டுள்ளதாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. அதாவது கௌதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களின் மூலம் ரஷ்ய வங்கியில் கடன் பெற்று பங்குகள் முறையீட்டில் ஈடுபட்டுள்ளதாக ஃபோர்பஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் அதானி குழுமத்துக்கு தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்கள் வினோத் அதானியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில், இந்தியாவில் தங்கி வணிகம் செய்யாத பணக்கார இந்தியர்களின் பட்டியலில் வினோத் அதானி முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய மறைமுக கட்டுப்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள பினாக்கிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது வணிகம் மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மூலம் கடந்த 2020-ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள விடிபி வங்கியில் 263 மில்லியன் டாலர்கள் கடனாக பெற்றுள்ளார். இதில் 258 மில்லியன் டாலர்களை பெயரிடப்படாத பங்குகளுக்கு வினோத் அதானி ஒதுக்கியுள்ளதாக ஃபோர்பஸ் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
அதன் பிறகு ரஷ்ய வங்கியில் இருந்து கடன் பெற்றதற்கு ஆதாரமாக பினாக்கிள் நிறுவனம் Afro Asia, World wide ஆகிய நிறுவனங்களை குறிப்பிட்டுள்ளது. இந்த 2 நிறுவனங்களும் அதானி குழுமத்தின் பங்குதாரர்களுக்கு சொந்தமானது என ஃபோர்பஸ் குறிப்பிட்டுள்ளது. மேலும் இதன் மூலம் அதானி குழுமத்துக்கான பங்குகளை பிற நிறுவனங்கள் மூலம் பெற்று அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.