
நாம் ஒரு பொருளை போட்டால் அது கீழே விழுகிறது. அதற்கு காரணம் புவி ஈர்ப்பு விசை என்பது தெரியும். பூமியில் மட்டும் தான் இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கிறதா அல்லது எல்லா கிரகங்களிலும் இருக்கிறதா? இப்படி பல பல கேள்விகள் நம்முல் எழலாம்.
எல்லா கிரகங்களிலும் இந்த விசையானது செயல்படுகிறது. அதற்கான சதவீதங்கள் மட்டுமே மாறுபடலாம். ஆனால் நம்முடைய பூமியில் ஒரு சில பகுதிகளில் புவியீர்ப்பு விசை இல்லை என்பது நம்முல் பலரும் அறியாத ஒன்றாக இருக்கிறது. அந்த இடங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
- மகாராஷ்டிர மாநிலம், கொங்கன்:
முதலாவதாக மகாராஷ்டிரா மாநிலம். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கன் பகுதியில் உள்ள டெக்கான் மலைப்பகுதியில் இருக்கும் அருவியில் தண்ணீர் கீழே விழுவதற்கு பதிலாக மேல் நோக்கி பாய்கிறது. இதை பார்ப்பதற்கு அற்புதமான ஒரு காட்சியாக இருக்கின்றது. இங்கு புவியீர்ப்பு விசைக்கு மாற்றாக இந்த அருவி செயல்படுகிறது.

- மவுண்ட் அராகட்ஸ் :
இரண்டாவதாக அர்மேனியாவில் இருக்கும் மவுண்ட் அராகட்ஸ். இந்தப் பகுதியை துருக்கி மற்றும் அர்மேனியா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இங்கு காரை நாம் நிறுத்தி வைத்தால் எந்த உதவியும் இல்லாமல் தானாகவே மலையேறி செல்கின்றதாம். மலையில் நிறுத்திய கார் கீழே இறங்கும். அதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் கீழே நிறுத்தியக்கார் மேலே ஏறி செல்வது அனைவருக்கும் ஆச்சரியமே.
இதே போல ப்ளோரிடாவில் இருக்கும் ஃபோக் மலையிலும் இந்த அதிசயம் நிகழ்கிறது மற்றும் இந்தியாவில் உள்ள லடாக் பகுதியில் உள்ள மேக்னடிக் மழையிலும் கூட இந்த அதிசயம் நிகழ்வதாக சொல்லப்படுகிறது.
- சாண்டா க்ரூஸ் மர்ம பிரதேசம் :
மூன்றாவதாக சாண்டா க்ரூஸ் மிஸ்டரி சார்ட். அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் இந்த பகுதியில் 150 அடி சுற்றளவில் ஒரு இடம் அமைந்துள்ளது. அங்கே புவி ஈர்ப்பு திசையின் மாறுபாட்டை நாம் உணரலாம். அங்கு கட்டும் வீடுகள் நேராக நிற்பதே இல்லையாம். அந்த இடத்தில் நடப்பவர்களுக்கு அந்தரத்தில் பறப்பது போல இருக்குமாம். திடீரென அங்கே கீழே விழுபவர்களும் உண்டு என கூறுகின்றனர்.
- செயிண்ட் இக்னேஸ் மர்ம பிரதேசம் :
நான்காவதாக அமெரிக்காவில் உள்ள செயிண்ட் இக்னேஸ். இங்கு 300 அடி சுற்றளவில் புவி ஈர்ப்பு விசை வேலை செய்வதில்லை. அங்கு நாம் சென்றால், நேராக கூட நிற்க முடியாதாம்.
- ஓரிகான் வோர்டெக்ஸ் :
ஐந்தாவதாக அமெரிக்காவில் உள்ள ஓரிகான் வோர்டெக்ஸ். இவ்விடத்தை குதிரைகள் கடக்கையில் நிதானித்து நின்று விடுமாம். அதற்கு காரணம் புவியீர்ப்பு விசைக்கு எதிர் விசை இங்கு நிகழ்வதாக கூறுகின்றனர்.
- ஹூவர் டேம் :
ஆறாவதாக ஹீவர் டேம். அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு அணையும் டெக்கான் மலைப்பகுதி போல தான். இந்த அணைக்குச் சென்று பாட்டில் இருந்து அல்லது வேறு கலத்தில் இருந்து தண்ணீரை கீழே கொட்டினால் தண்ணீர் கீழே விழுவதற்கு பதிலாக காற்றில் மேல்நோக்கி செல்கிறதாம்.
- கியாகிடியோ பகோடா :
ஏழாவதாக கியாகிடியோ பகோடா. பர்மா மியான்மரில் உள்ள இந்த இடம்தான் இந்த மலையை தங்க மலை என்றும் கூறுகிறார்கள். இதில் என்ன அதிசயம் என்றால் இந்த தங்க மலை உருண்டு விழுந்துவிடும் நிலையிலேயே 2500 வருடமாக இருக்கின்றது என சொல்லப்படுகிறது.