
அமெரிக்க நாட்டில் ஃப்ளோரிடா மாகாணத்தில் 21 வயது உள்ள இளைஞர் ஒருவர் கடின உழைப்பு மற்றும் உடல் அயர்ச்சி காரணமாக உறங்க சென்றுள்ளார். அப்போது அவர் தன்னுடைய கண்ணில் காண்டக்ட் லென்ஸ் அணிந்திருந்ததை மறந்துள்ளார். இது போல் அவர் சில சந்தர்ப்பங்களில் லென்ஸை அகற்றாமல் உறங்கிய போது சிறு சிறு உபாதைகள் கண்களில் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த தடவை அவர் தனது கண்ணை இழக்க நேரிட்டுள்ளது.
இதற்கு காரணம் ஒரு அரிய வகை ஒட்டுண்ணியே ஆகும். இந்த ஒட்டுண்ணி அவருடைய கண்ணில் அக்கன்தாமோபா கிராடிடிஸ் என்னும் என்னும் நோயை ஏற்படுத்தி அவருடைய கண்ணை தின்றுவிட்டது. இதனால் அவர் தனது ஒரு கண்ணை இழக்க நேரிட்டுள்ளது. தனக்கு ஏற்பட்டது போல் வேறு யாருக்கும் இவ்வாறான பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற காரணத்தினால் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் நிதியும் திரட்டி வருகின்றார்.