
தூங்கிக் கொண்டே உடல் எடையை குறைக்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மைதான். எனவே தூங்கிக் கொண்டே எப்படி உடல் எடையை குறைக்க முடியும் என தெரிந்து கொள்ளுங்கள். உடல் எடையை குறைக்க சர்க்கரை உணவுகளை சாப்பிடாமல் இருப்பது, ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு முழுமையாக மாறுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்றவை உதவியாக இருந்தாலும் கூடுதல் எடையை குறைப்பதற்கு தூக்கம் மிக உதவியாக இருக்கிறது என ஆய்வில் சொல்லப்படுகிறது.
நம்மில் பலர் உணவை தனியாக சாப்பிட்டாலும் நொறுக்கு தீனியை நாள் முழுவதும் அவ்வபோது சாப்பிடும் வழக்கத்தை வைத்துள்ளோம். இதனால் சீக்கிரம் தூங்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே முதலில் நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கத்தை குறைக்க வேண்டும். இது தூக்கத்தை அதிகரிக்கும் பணி மற்றும் பொழுதுபோக்கு காரணமாக இரவு முழுவதும் தூங்காமல் அதிகாலையில் தூங்கும் பழக்கத்தை பலர் வைத்துள்ளார்கள். இதனால் இயற்கைக்கு மாறாக பசி அதிகரிக்கும். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இரவு 11 மணி முதல் காலை 8 மணி வரை முழுமையாக தூங்குபவர்களை விட 550 கலோரி அதிகமாக சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
தூக்கத்தின் போது ஒரு நபர் ஒரு மணி நேரத்திற்கு 65 கலோரிகளை எரிக்கின்றனர். எனவே எட்டு மணி நேர தூக்கத்தில் 500 கலோரிக்கு மேல் எரிக்க முடியும். மேலும் பத்திரிகை ஒன்று வெளியிட்ட தகவலின் படி முழுமையாக தூங்குபவர்களை விட ஷாப்பிங் சென்று விட்டு மன மகிழ்ச்சியோடு தூங்குபவர்கள் 1300 மதிப்புள்ள கூடுதல் கலோரிகளை எரிப்பதாக தெரியவந்துள்ளது. தூக்கமின்மை நேரடியாக நமது கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கிறது. இது தானாக உடல் எடையை அதிகரிக்கும். அதை தடுக்க குறைந்த கலோரிகளை கொண்ட உணவை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக படுத்து உறங்குங்கள்.