ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பொதுக்குழுவிற்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணையானது நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கினுடைய தீர்ப்பு என்பது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் என உச்சநீதிமன்றத்தினுடைய அந்த வழக்கு பட்டியல் விவரத்தில் தெரியவந்துள்ளது..

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான ஒரு தீர்ப்பை அளித்திருந்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஈபிஎஸ் சார்பில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட  அமர்வு ஈபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு அளித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது..

அந்த வழக்கை பொறுத்தவரை அந்த பொதுக்குழு செல்லுமா செல்லாதா? எனவும், பொதுக்குழு செல்லும் என்றாலும் கூட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா என இதுபோன்ற வாதங்கள் தான் முன்வைக்கப்பட்டன. ஓபிஎஸ் அவர்களை நீக்குவதற்கு அதிகாரம் இருக்கிறதா போன்ற வாதங்கள் எல்லாம் முன் வைக்கப்பட்ட நிலையில்,  இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி தொடர்பான மனுக்களும் விசாரிக்கப்பட்டு, அதிலும் தனியாக உத்தரவு எல்லாம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தான் இந்த முக்கிய தீர்ப்பை நாளை தினேஷ் மகேஸ்வரி மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வு வழங்குகிறது..