ரஷ்ய நாட்டில் நோவோசிபிர்ஸ்க் என்ற பகுதியில் இக்லூ பணி வீடு அமைக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 2500 வேர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களுடன் அறுவை கருவிகள், இயந்திரங்கள் மற்றும் மண் வெட்டிகளுடன் 327 அணி குழுவினராக பங்கேற்றனர். இவர்கள் 198 இக்லூ பணி வீடுகளை கட்டியுள்ளனர். இந்த போட்டி சைபீரியா மாகாணத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகின்றது.

முன்னதாக இக்லூ வீடுகள் கிரீன்லேண்ட், கனடா போன்ற நாடுகளில் உள்ள இன்லுட் என்ற பழங்குடி மக்களின் பாரம்பரிய குடியிருப்புகளாக கருதப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்ட பெண் ஒருவர் கூறியதாவது “இந்த வீடுகளை அனைவராலும் கட்டிவிட முடியாது. இது ஒரு சுவாரசியமான அமைப்பைக் கொண்டது. இந்த இக்லூ வீடு பனிக்கட்டியால் கட்டப்பட்டது தான். ஆனால் இதன் உள்ளே குளிர் இருக்காது. கதகதப்பான வெப்பம் மட்டுமே இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.