பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. அங்கு எரிபொருள் உணவு அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்த தடுமாறி வருகின்றனர். இதனால் அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் மத்திய வங்கி திணறி வருகின்றது. மேலும் கஜானாவில் வைக்கப்பட்டிருந்த டாலர்களும் தீர்ந்து வருவதால் பாகிஸ்தான் விரைவில் திவால் ஆகிவிடும் என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் அந்நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பணம் கடனாக பெற முயற்சித்து வருகின்றது.

இதற்காக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றுவதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை பாகிஸ்தானுக்கு கடனாக வழங்க சீனா முன்வந்துள்ளது. இந்த பணம் இவ்வார இறுதிக்குள் பாகிஸ்தானின் மத்திய வங்கியில் செலுத்தப்பட உள்ளது. இந்தக் கடனுதவி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.