கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ஊழியர்களை தொடர்ந்து 100 ரோபோக்களையும் பணிநீக்கம் செய்து உள்ளனர். உலகில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூகுளின் தாய் நிறுவனமான Alphabet-ல் ஊழியர்களை தொடர்ந்து 100 ரோபோக்களின் பயன்பாடும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் செலவை குறைக்கும் வகையில் உணவு விடுதி மேசைகளை சுத்தம் செய்யவும் குப்பைகளை தனியாக பிரிக்கவும் கதவுகளை திறந்து விடவும் பணியமர்த்தப்பட்ட ரோபோக்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ரோபோக்களின் தொழில்நுட்பங்கள் வேறு பிரிவுகளில் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.