அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம் பி ஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (TANCET) எழுத வேண்டும். இந்த ஆண்டிற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 22ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி 28ஆம் தேதி ஆன இன்று விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே இன்று மாலைக்குள் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டுகள் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.