
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணிமண்டபம் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி அமைந்துள்ளது. இங்கு திருட்டு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்கள் அடைக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
இவர் நேற்று மாலை திடீரென பள்ளியில் இருந்து தப்பி சென்றுள்ளார். எனவே இது குறித்து சீர்திருத்த பள்ளி அலுவலர்கள் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பெயரில் போலீசார் அந்த சிறுவனை தேடி வருகின்றனர்.