அமெரிக்காவில் உள்ள மிசிசிபி மாகாணத்தில் 15 வயதான சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் மனநிலை சரியில்லாதவர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி அன்று, அந்தச் சிறுமி அவரது தாயாரின்  செல்போனை பயன்படுத்தியுள்ளார். இதனால் அவரது தாயார் கண்டித்துள்ளார். அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த சிறுமி அவரது தாயாரை, துப்பாக்கியை எடுத்து அவரது முகத்தில் சுட்டுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அதன் பிறகு அந்தச் சிறுமி மறுபடியும் செல்போனை எடுத்து பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்தச் சிறுமி தனது தாயாரின் செல்போனில் இருந்து தந்தைக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி கூறியுள்ளார்.

அதன்படி விரைந்து வந்த தந்தையையும், அந்தச் சிறுமி சுட்டுக் கொள்ள முயற்சித்துள்ளார். இதில் அவரது தோளில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அவர் துப்பாக்கியை பிடித்து தடுத்துள்ளார். அங்கிருந்து தப்பிய சிறுமி, தனது நண்பர்களிடம் தன்னுடைய தாய் இறந்து விட்டதாக கூறிய வீட்டிற்கு அழைத்து வந்து தாயின் உடலை காண்பித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சிறுமியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். அப்போது அந்த சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியுள்ளார்.