சேலம் மாவட்டத்தில் உள்ள வீரனூர் பகுதியில் பெரியசாமி (64) என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயக் கூலி தொழிலாளி ஆவார். இவர் ஒரு விவசாய தோட்டத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் அங்கு கூலி வேலைக்காக 15 வயது சிறுமி ஒருவர் வந்துள்ளார். இந்த சிறுமியை பெரியசாமி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் அவர் கர்ப்பமானார்.

சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அது குறித்து விசாரித்த போது பெரியசாமி பாலியல் பலாத்காரம்  செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக‌ வாழப்பாடி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்த நிலையில் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை போச்சோ ‌ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.