மத்திய பிரதேசத்தில் உள்ள ஃபகிர் என்ற காலனியில் பவன் ராஜக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இரண்டாம் ஆண்டு BA படித்து வந்துள்ளார். அவர் வாழும் அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரவு நேரம் பூஜை நடந்துள்ளது. இந்நிலையில் தினமும் கோவிலுக்கு சென்று பக்தி பாடல்களை பாடும் பழக்கம் கொண்டிருந்த இவர், சம்பவநாளில் தனது நண்பர் அபிஷேக் வைஷுவுடன் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது வழக்கம் போல பாடல்களை பாடிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அங்கு இருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இந்நிலையில் பவனின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இவர் ராணுவம் மற்றும் காவல் துறையில் சேர தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார் என்றும், தினமும் ஒழுங்கான உடற்பயிற்சி செய்து வருவதால் உடல் ஆரோக்கியமாக இருந்தார் என்றும் கூறுகிறார்கள். எனவே இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமீப காலமாக ஆரோக்கியமாக இருக்கும் இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. .