உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், காதல் விஷயத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் தனது காதலியின் அறைக்குள் நுழைந்த, 16 வயது சிறுவனை கிராம மக்கள் பார்த்தனர். அதன் பிறகு, அப்பெண்ணின் வீட்டிற்கு வெளியே கிராம மக்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவனும், அப்பெண்ணும் அறையில் உல்லாசமாக இருந்ததாக கூறி சிறுவனை போலீசில் ஒப்படைக்க முயற்சி செய்தனர். 23 வயதான அந்தப் பெண் சிறுவனுக்கு ஆதரவளித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க விடவில்லை.

அந்தச் சிறுவனுக்கும், பெண்ணுக்கும் திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். சிறுவனின் கையில் குங்குமம் குடுத்து, பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைக்க சொல்லப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, சிறுவன் ஒரு மைனர் (16 வயது) என்பதால், குழப்பம் ஏற்பட்டது.

இதனால் சட்டபூர்வ திருமணம் முடியாது என்பதால், இருவரது குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்தில் சமரசம் செய்தனர். காவல் நிலைய அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அதன்பின், இருவரும் கோவிலில் பரஸ்பர சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு, 16 வயது சிறுவன் தனது 23 வயது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவம் கோரக்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் மைனர் என்பதால், இந்த சம்பவம் சட்டரீதியாக சிக்கலாகும் வாய்ப்புகள் இருப்பதை அதிகாரிகள் கவனித்துள்ளனர். ஆனால், தற்போதைக்கு இருவரின் குடும்பங்களும் சமாதானமாக சமரசம் செய்ததால், இந்த விவகாரம் தற்காலிகமாக முடிவடைந்துள்ளது.