
கேரளா மாநிலம் சேர்த்தலா என்னும் பகுதியில் ரமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகிறது. இவரது வீட்டின் அருகே 4 வயதில் ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த முதியவர் வீட்டிற்கு அடிக்கடி டிவி பார்ப்பதற்காக செல்வார். இதை ரமணன் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுஅடிக்கடி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ந்த நிலையில் சம்பவ நாளில் சிறுமி ரமணன் வீட்டிற்கு சென்றதும் அவர் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை சிறுமியின் பாட்டி பார்த்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்து உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதைத்தொடர்ந்து ரமணன் மீது காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் ரமணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்ததால் தற்போது அவருக்கு 110 வருடங்கள் சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.