
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் சர்தார் பகுதியில் உள்ள மஹாவலிபூர் கிராமத்தில் வசித்து வருபவர் தீரத்பால் (60). இவர் கடந்த மார்ச் 15ஆம் தேதி அப்பகுதியில் வசித்து வரும் 26 வயதான பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கிராம பஞ்சாயத்து கூட்டப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்தில், பாதிக்கப்பட்ட பெண் மாட்டு சாணம் வீசுவதற்காக கிராமத்திற்கு வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில் தீரத்பால் அந்தப் பெண்ணை அருகில் உள்ள வயலில் கட்டப்பட்டுள்ள குழாய் கிணற்று அறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளதாகவும், ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தீரத்பாலிடமிருந்து தப்பித்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன் பின் அந்தப் பெண் அவரது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை அடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். இந்த புகாரிர்குப் பிறகு கிராமத்தில் நடைபெற்ற உள்ளூர் பஞ்சாயத்தில் தீரத்பாலை 5 முறை செருப்பால் அடிக்க வேண்டும் என தண்டனை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தீரத்பாலின் மாமா தண்டனை நிறைவேற்றும் போது 2 முறை மட்டுமே செருப்பால் அடித்துள்ளார்.
இது குறித்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ராஜேஷ் தங்கர் கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகியுள்ளார் அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிராம பஞ்சாயத்து முடிவு குறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
#मुजफ्फरनगर में 60 साल के बूढ़े को पंचायत ने दो जूते मारने की सजा सुनाई है
हुआ यूं कि बूढ़े तिरपाल ने किशोरी को बुरी नीयत से दबोच लिया. उसे खींचकर खेत में ले गया और उसके कपड़े फाड़ डालें
किशोरी से रेप का प्रयास किया गया. किशोरी किसी तरह बूढ़े के चंगुल से निकलकर बच निकली
मुकदमा… pic.twitter.com/5rNlj1qm7K
— Narendra Pratap (@hindipatrakar) March 17, 2025