கேரளா மாநிலம் பத்தனப்பட்டை அருகே கொடுமணில், ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்திருந்த 60 வயது முதியவர் ஷஷிதரன் பிள்ளையை, அவரை பராமரிக்க நியமிக்கப்பட்ட ஹோம் நர்ஸ் தாக்கியதாக கடுமையான புகார் எழுந்துள்ளது. வீட்டுன் உள்ளே நர்ஸ் இவரை கட்டிப்பிடித்து தாக்கும் காட்சிகள் சிசிடிவி மூலம் வெளியாகி உறவினர்களால் போலீசில் வழங்கப்பட்டுள்ளன.

முதியவர் ஷஷிதரன் பிள்ளை, ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஆவார். கடந்த சில மாதங்களாகவே நோய் பாதிப்பால் வீட்டில் ஓய்வில் இருந்தார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் விஷ்ணு என்ற நபர், ஹோம் நர்ஸ் என அவரை பராமரிக்க குடும்பத்தினர் நியமித்தனர். ஷஷிதரனின் மனைவி தஞ்சாவூரில் வேலை செய்து வருவதாலும், அவரது ஒரே மகள் மற்றொரு இடத்தில் இருப்பதாலும் வீட்டில் தனியாகவே இருந்தார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் வீடிலிருந்து அழைத்தபோது அபத்தமான சத்தம் கேட்டதை அடுத்து உறவினர்கள் சந்தேகித்து வீட்டில் வந்து பார்த்தபோது, அவரை அபத்தான நிலையில் கிடந்தார். உடனே அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தலையிலும் உடலும் பலத்த காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், புகாரின் பேரில் போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். அடூரிலுள்ள ஒரு தனியார் எஜென்சி மூலம் இந்த ஹோம் நர்ஸ் நியமிக்கப்பட்டதாக தெரிகிறது.