திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அரவிந்த் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 9 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தைக்கு பிறவியிலேயே கண்பார்வை சரியில்லாமல், கண்ணில் புரை இருந்துள்ளது. இதனால் அரவிந்த் குமார் தனது குழந்தையை அரசு மருத்துவமனையில் குழந்தை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கண்புரை பிரச்சினை இருப்பதை கண்டறிந்து கண் பிரிவு மருத்துவரை சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தனர்.

அதன்படி கண் மருத்துவர்கள் குழந்தைக்கு லென்ஸ் வைக்கலாமா என்று ஆலோசித்தனர். ஆனால் 2 வயதுக்கு அதிகமான குழந்தைகளுக்கு மட்டுமே கண் சிகிச்சை செய்ய முடியும். இதனால் அந்தக் குழந்தைக்கு கண் புரை அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். முதலில் வலது கண்ணில் சிகிச்சை செய்ததோடு, குழந்தைக்கு கண் பார்வையும் கிடைத்தது. மீண்டும் ஒரு மாதம் கழித்து மற்றொரு கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளனர். 2 வருடம் கழித்து லென்ஸ் பொருத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.