கோலிவுட் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் சென்ற மாதம் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை அடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கின்றார். இந்த படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டிருக்கின்றது. தற்போது படத்தின் படபிடிப்பானது காஷ்மீரில் நடந்து வருகின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றது. இந்த படம் குறித்த அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி வைரலாகி வருகின்றது.

அண்மையில் காஷ்மீரில் படபிடிப்பு தளத்தில் படக்குழுவினர் இணைந்து பிறந்தநாள் கொண்டாடும் செலிப்ரேஷன் போட்டோக்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் நடிகை திரிஷா காஷ்மீரில் உள்ள பனிகளுக்கு நடுவே ஜெர்கின் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டால் ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கின்றார். இவரின் இந்த புகைப்படத்திற்கு தற்போது ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகிறது.