
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதாவது நினைவுச் சின்னமான தாஜ்மஹாலில் ராயல் கேட் (Royal Gate) அருகே இருந்த தேனீ கூடு திடீரென கீழே விழுந்ததுள்ளது. இதனால் உள்ளிருந்த தேனீக்கள் சுற்றியிருந்த சுற்றுலாப் பயணிகளை தாக்க ஆரம்பித்தன. திடீரென ஏற்பட்ட இந்த சூழ்நிலையால் பயணிகள் பதட்டமடைந்து செய்வதறியாமல் அங்குமிங்கும் ஓடினர்.
சிலர் தாஜ்மகால் வளாகத்திற்குள் சென்றனர். இன்னும் சிலர் பாதுகாப்பான பகுதிகளை தேடி அமர்ந்து கொண்டனர். அதோடு சுற்றுலா பயணிகள் தேனீக்களால் சிறிய அளவில் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அதிகாரிகள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தேனீக்களை கட்டுப்படுத்த, நிலைமை மீண்டும் சாதாரணமாகியது.